20 ஆயிரம் பேருக்கு வேலை: ஜியோமி அறிவிப்பு

தினமலர்  தினமலர்
20 ஆயிரம் பேருக்கு வேலை: ஜியோமி அறிவிப்பு

புதுடில்லி : சீனா­வைச் சேர்ந்த ஜியோமி, இந்­தி­யா­வில், மொபைல் போன்­கள் விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின் நிறு­வ­னர் லீ ஜுன், ஒரு வார பய­ண­மாக, இந்­தியா வந்­துள்­ளார். அவர், பிர­த­மர் நரேந்­திர மோடியை சந்­தித்து பேசி­னார். அப்­போது, இந்­தி­யர்­கள் விரும்­பும் வகை­யில், உள்­நாட்­டில் ஸ்மார்ட் போன் வடி­வ­மைப்­பது, ‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்­தின் கீழ், இந்­தி­யா­வில் போன் உற்­பத்தி செய்­வது ஆகி­யவை தொடர்­பாக ஆலோ­சித்­து உள்­ளார்.
இது­ கு­றித்து, அந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: இந்­தியா வந்­துள்ள எங்­கள் நிறு­வ­னத்­தின் தலை­வர், பிர­த­மர் மோடி, மத்­திய நிதி அமைச்­சர் அருண் ஜெட்லி, தக­வல் தொழில்­நுட்ப அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் ஆகி­யோரை சந்­தித்து, மொபைல் உற்­பத்­தியை அதி­க­ரிப்­பது குறித்து பேசி­னார். ஆந்­திர மாநி­லம், ஸ்ரீ சிட்­டி­யில், ஜியோமி, தன் இரண்­டா­வது தொழிற்­சாலை அமைப்­ப­தற்­கான அறி­விப்பை, சமீ­பத்­தில் வெளி­யிட்­டது.அடுத்த மூன்று ஆண்­டு­களில், நிறு­வ­னம், 20 ஆயி­ரம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும். 2016ல், ஜியோமி இந்­தி­யா­வின் வரு­வாய், 100 கோடி டாலரை எட்­டி­யது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை