மூன்­றாம் நபர் வாகன காப்­பீட்டு பிரீ­மி­யம் 41 சத­வீ­தம் உயர்வு

தினமலர்  தினமலர்
மூன்­றாம் நபர் வாகன காப்­பீட்டு பிரீ­மி­யம் 41 சத­வீ­தம் உயர்வு

மும்பை : காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு பிரீமியத்தை, 41 சதவீதம் உயர்த்தி உள்ளது.இதன்படி, 1 – 1.5 லிட்டர் இன்ஜின் திறன் கொண்ட, தனியார் வாகனங்களுக்கான பிரீமியம், 2,237 ரூபாயில் இருந்து, 3,132 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.அதே சமயம், 1 லி., இன்ஜின் திறனுள்ள, தனியார் கார்களுக்கான காப்பீட்டு பிரீமியம் உயர்த்தப்படாமல், 2,055 ரூபாயாக உள்ளது. வர்த்தக வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியமும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இருசக்கர வாகன பிரிவில், 75 சிசி வாகனங்களுக்கான பிரீமியம், 569 ரூபாய் என்ற அளவிலேயே, உயர்த்தப்படாமல் உள்ளது. அதே சமயம், 150 சிசி வரை உள்ள, இருசக்கர வாகனங்களின் பிரீமியம், 619 ரூபாயில் இருந்து, 720 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 350 சிசி வரை உள்ள, வாகனங்களுக்கான பிரீமியம், 970 ரூபாயில் இருந்து, 1,114 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான பிரீமியம், 4,200 ரூபாயில் இருந்து, 5,680 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு, ஏப்., முதல் அமலுக்கு வருகிறது.

மூலக்கதை