‘ஸ்டார்ட் அப்’ நிறுவன விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு திட்டம்

தினமலர்  தினமலர்
‘ஸ்டார்ட் அப்’ நிறுவன விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு திட்டம்

புது­டில்லி : வலை­த­ளம் மூலம் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்­கான விதி­மு­றை­களை மாற்ற, மத்­திய அரசு திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, மத்­திய தொழில் கொள்கை மற்­றும் மேம்­பாட்டு துறை செய­லர் ரமேஷ் அபி­ஷேக் கூறி­ய­தா­வது: ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு பல்­வேறு சலு­கை­களை அறி­வித்­துள்­ளது. இத்­து­றை­யில், இளம் தொழில்­மு­னை­வோரை ஊக்­கு­விக்­கும் வகை­யில், வரு­மான வரி விலக்கு, காப்­பு­ரிமை கட்­டண சலுகை, ஆய்­வுக்­கான வளர்ப்­பக வசதி உள்­ளிட்­டவை வழங்­கப்­ப­டு­கின்றன.இந்­நி­லை­யில், சில விதி­மு­றை­க­ளால், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள், வெளி­நா­டு­களில் பதிவு அலு­வ­ல­கத்தை அமைக்க வேண்­டிய நெருக்­க­டிக்கு ஆளா­வ­தாக கூறப்­ப­டு­கிறது.அத­னால், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்­கான விதி­மு­றை­களில் மாற்­றம் செய்ய, அரசு திட்­ட­மிட்டு உள்­ளது. ஏற்­க­னவே, சில விதி­மு­றை­கள் மாற்­றப்­பட்டு உள்ளன. இந்­தாண்­டுக்­குள், குறிப்­பிட்ட விதி­மு­றை­கள் மாற்­றப்­படும்.
ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் சுல­ப­மாக நிதி­யு­தவி பெற, விரை­வில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில், கடன் உத்­த­ர­வாத நிதி­யம் ஏற்­ப­டுத்­தப்­படும். இந்­தி­யா­வில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு, நிதி­யு­தவி கிடைப்­பது கடி­ன­மாக உள்­ளது. அப்­ப­டியே கிடைத்­தா­லும், அதற்­கான செல­வி­னம் அதி­க­மாக உள்­ளது. அச்­செ­ல­வி­னத்தை குறைக்க, மத்­திய அரசு முயற்சி மேற்­கொண்டு வரு­கிறது. இந்­தி­யா­வில், தற்­போது, 16 மாநி­லங்­கள், ஸ்டார்ட் அப் கொள்­கையை அறி­வித்து செயல்­ப­டுத்தி வரு­கின்றன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை