அதிகரிக்கும் மின்னணு வர்த்தகம் ; ஆனாலும் கடைகளுக்கே முதலிடம்

தினமலர்  தினமலர்
அதிகரிக்கும் மின்னணு வர்த்தகம் ; ஆனாலும் கடைகளுக்கே முதலிடம்

புதுடில்லி : ‘மின்­னணு வர்த்­த­கம் எனப்­படும், வலை­த­ளம் வாயி­லாக பொருட்­கள் வாங்­கு­வது அதி­க­ரித்து வந்­தா­லும், கடை­களில் தான், பெரும்­பான்­மை­யான விற்­பனை நடை­பெ­று­கிறது’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது. ஜெப்ரா டெக்­னா­லஜி நிறு­வ­னம், கடை­கள் மற்­றும் வலை­த­ளங்­களில், பொருட்­களின் சில்­லரை விற்­பனை குறித்து, ஆய்வு மேற்­கொண்­டது.
உல­க­ள­வில், பிரத்­யேக பொருட்­களை விற்­பனை செய்­யும் சிறப்பு அங்­கா­டி­கள், வர்த்­தக வளா­கங்­கள், ஆடை­ய­கங்­கள், பல்­பொ­ருள் கடை­கள், மின்­னணு சாதன விற்­பனை மையங்­கள், மருந்­த­கங்­கள், வீட்டு பொருட்­களை விற்­பனை செய்­யும் மையங்­கள் உட்­பட, சில்­லரை விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுள்ள, 1,700க்கும் அதி­க­மா­னோ­ரி­டம், இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.
இது குறித்து, ஜெப்ரா டெக்­னா­லஜி நிறு­வ­னத்­தின், இந்­தி­யா­விற்­கான, பிராந்­திய விற்­பனை பிரிவு இயக்­கு­னர் தீப் அகர்­வால் கூறி­ய­தா­வது: உல­க­ள­வில், பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த, சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்­வில், இந்­தியா உள்­ளிட்ட, ஆசிய பசி­பிக் பிராந்­திய நாடு­களின் பங்­க­ளிப்பு, 28 சத­வீத அள­விற்கு இருந்­தது. மின்­னணு வர்த்­த­கம் மிக வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கிற போதி­லும், கடை­க­ளுக்­குச் சென்று பொருட்­கள் வாங்­கு­வ­தில், மக்­க­ளுக்கு உள்ள ஆர்­வம் சிறி­தும் குறை­ய­வில்லை.
ஒட்­டு­மொத்த சில்­லரை விற்­ப­னை­யில், கடை­கள் வாயி­லாக, 91 சத­வீத அள­விற்கு விற்­பனை நடை­பெற்று வரு­வது ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. அதே சம­யம், சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள், தங்­கள் கடை­க­ளு­டன், வலை­த­ளம் வாயி­லா­க­வும் பொருட்­களை விற்­பனை செய்து, வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.அவர்­கள், வலை­த­ளம் வாயி­லா­கவே, கடை­களை பார்­வை­யி­ட­வும், பொருட்­களை தேர்வு செய்­ய­வும் தேவை­யான தொழில்­நுட்ப வச­தி­களை அளிக்க ஆர்­வ­மாக உள்­ள­தாக தெரி­வித்து உள்­ள­னர். வர்த்­த­கம் பெருக, வலை­த­ளம் மற்­றும் கடை­கள் வாயி­லான சேவை­களை ஒருங்­கி­ணைப்­பது முக்­கி­யம் என, 76 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர்.
சரக்கு போக்­கு­வ­ரத்து, கிடங்கு இருப்பு, பொருட்­கள் சப்ளை உள்­ளிட்­ட­வற்றை, உட­னுக்­கு­டன் அறிந்து கொள்ள, ‘சென்­சார்’ உள்­ளிட்ட தொழில்­நுட்ப வச­தி­களை பயன்­ப­டுத்த உள்­ள­தாக, 73 சத­வீ­தம் பேர் தெரி­வித்து உள்­ள­னர்.ஆசிய பசி­பிக் பிராந்­தி­யத்­தைச் சேர்ந்த, சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­களில், 76 சத­வீ­தம் பேர், 2021க்குள், நவீன தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி, வாடிக்­கை­யா­ளர் வருகை, பொருட்­கள் தேர்வு போன்­ற­வற்றை கணித்து, வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­திக் கொள்ள உள்­ள­தாக கூறி­யுள்­ள­னர். இவ்­வாறு அவர் தெரி­வித்து உள்­ளார்.

மூலக்கதை