மயாமி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் வோஸ்னியாக்கி

தினகரன்  தினகரன்

நியூயார்க்: மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். கால் இறுதியில் செக் குடியரசின் லூசி சபரோவாவுடன் நேற்று மோதிய வோஸ்னியாக்கி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் கரோலினா பிளிஸ்கோவா (செக்.) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் மிர்ஜானா லூசிக் பரோனியை (குரோஷியா) வீழ்த்தினார். மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டிரைகோவா (செக்.) ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வானியா கிங் - ஷ்வெடோவா (கஜகஸ்தான்) ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.வாவ்ரிங்கா அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் முதல் நிலை வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (சுவிஸ்) 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரவிடம் (ஜெர்மனி, 16வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீரர்கள் ரபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிஸ்), நிக் கிர்ஜியோஸ் (ஆஸி.), ஜாக் சாக் (அமெரிக்கா), தாமஸ் பெர்டிச் (செக்.), பேபியோ பாக்னினி (இத்தாலி), கெய் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

மூலக்கதை