வருவாய்த்துறையில் காலி பணியிடங்களால்... பணிச்சுமை! கூடுதல் பொறுப்பால் அதிகாரிகள் சோர்வு

தினமலர்  தினமலர்
வருவாய்த்துறையில் காலி பணியிடங்களால்... பணிச்சுமை! கூடுதல் பொறுப்பால் அதிகாரிகள் சோர்வு

திருப்பூர் : மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட, வருவாய்த்துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன; கூடுதல் பணிச்சுமையால், அதிகாரிகளும், அலுவலர்களும் சோர்வடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், வருவாய்த்துறையில் முக்கியமான பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி யாக உள்ள மாவட்ட வழங் கல் அலுவலர் பணியை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பழனியம்மாள், கூடுதலாக கவனிக்கிறார். தாலுகா அலுவலகங்களில், நிர்வாக பணிகளை தாசில்தார் கவனிக்கிறார். குடிமைப்பொருள் பணிகளை, குடிமைப்பொருள் தனி தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவ லர் மேற்கொள்கின்றனர்.சமூகபாதுகாப்பு திட்ட பணிகளை, தனி தாசில்தார்கள் கவனித்து வருகின்றனர். வருவாய்த் துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஒட்டுமொத்த நிர்வாக பணிகளையும், தாசில்தார்கள் தனியாக தலையில் சுமக்க வேண்டியுள்ளது. வடக்கு தாலுகாவில், குடிமைப்பொருள் தனி தாசில்தார் பணியிடம் காலியாக இருக்கிறது; சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.திருப்பூர் தெற்கு தாலுகாவில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பணியிடம் காலியாக உள்ளது; தாசில்தார், கூடுதலாக அதை மேற்கொள்கிறார். அவிநாசியில், வட்ட வழங் கல் அலுவலர் பணியிடம் காலியாக, மூன்று ஆண்டுகளாக இருப்பதால், தலைமையிடத்து தனி துணை தாசில்தார், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். தாசில்தார் அருணா, சமூக பாதுகாப்பு திட்ட பணிகளையும், கவனித்து வருகிறார்.காங்கயம் தாலுகாவில், வட்ட வழங்கல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், தலைமையிடத்து தனி துணை தாசில்தார், கூடுதல் பொறுப்பை கவனித்து வருகிறார். உடுமலையில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆறுமுகம், குடிமைப்பொருள் வழங் கல் தனி தாசில்தார் பொறுப்பையும் ஏற்றுள் ளார். தாராபுரத்தில், வட்ட வழங்கல் அலுவலர் பணியிடத்தை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், கூடுதலாக கவனிக்கிறார்.ஊத்துக்குளியில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், கூடுதல் பொறுப்பாக வட்ட வழங்கல் அலுவலர் பணிகளையும் மேற்கொள்கிறார். மடத்துக் குளத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் பணியை கவனிக்கிறார். மாவட்ட அளவில், ஊத்துக்குளி மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் மட்டும், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் பணியில் உள்ளனர். மற்ற ஏழு தாலுகாவில், அப்பணியிடம் காலியாக உள்ளது. "ஸ்மார்ட்' கார்டு தயாரிப்பதற்காக, ரேஷன் கடையில், ஆதார் விவரங்களை "ஸ்கேன்' செய்யும் பணி நடக்கிறது.அத்துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தால், இப்பணிகளை கூடு தல் சுமையாக கவனிக்க வேண்டியுள்ளதால், பணிகள் மந்த கதியில் நடக்கிறது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் இல்லாததால், சட்டம், ஒழுங்கு மற்றும் நிர்வாக பொறுப்பை கவனிக்கும் தாசில்தார்களுக்கு, பணிச்சுமை அதிகரித்துள்ளது.பணிச்சுமையை உணர்ந்து, காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை