அனகாபுத்தூர் நகராட்சியில் ஆணையரை முற்றுகையிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அனகாபுத்தூர் நகராட்சியில் ஆணையரை முற்றுகையிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்லாவரம்- சென்னை அனகாபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், கடந்தாண்டு முதல் அசோக்நகரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் குப்பைகளை அகற்றி வந்தது. அவர்களுக்கு நகராட்சி சார்பில் நாளொன்றுக்கு ரூ. 395 என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், அனகாபுத்தூர் நகராட்சியில் அந்நிறுவனத்தை சேர்ந்த 12 ஒப்பந்த தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்படாமல், நாளொன்றுக்கு சம்பளமாகரூ. 195 மட்டுமே மாதக்கணக்கில் இழுத்தடித்து வழங்கப்பட்டு வருவதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில், அனகாபுத்தூர் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆணையர் பேசும்போது, ‘நகராட்சியில் பணியாற்றும் 120 தொழிலாளர்களுக்கும் அந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமாக வழங்கிவிட்டோம்.

உங்களுக்கு உரிய சம்பளமும் பாதுகாப்பு கவசங்களையும் அந்நிறுவனம் தரவில்லை என்றால், நீங்கள் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்னை. இதில் நாங்கள் தலையிட முடியாது’ என்றார்.


.

மூலக்கதை