டோனி காதலியாக நடித்த திஷாவை பின்தொடர்ந்த ரசிகர் போலீசில் சிக்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோனி காதலியாக நடித்த திஷாவை பின்தொடர்ந்த ரசிகர் போலீசில் சிக்கினார்

ஸ்ருதி ஹாசன் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்ற ரசிகர் ஒருவர் ஒருநாள் அவரது வீட்டுக்குள் புகுந்து வம்பு செய்தார். கடந்த ஆண்டு நடந்த இந்த சம்பவம் பரபரப்பானது.

அதேபோல் மற்றொரு நடிகைக்கு இதுபோன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது. கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது காதலியாக நடித்து பிரபலமானார் திஷா படானி.

இவருக்கு ரசிகர்கள் வட்டம் பெருகியது. படப்பிடிப்புக்கு சென்றாலும், ஷாப்பிங் செய்வதற்காக மால்களுக்கு சென்றாலும் திஷாவை ஒரு ரசிகர் மட்டும் பின்தொடர்ந்து வந்தார்.

சமீபத்தில் ஸ்டார் ஓட்டலில் திஷா தங்கினார். அங்கு வந்த ரசிகர், திஷாவை நேரில் பார்க்க வேண்டும் என்று தகராறு செய்தார்.

அவரை ஓட்டல் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர் உள்ளே செல்ல முயன்றார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து அந்த நபரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திஷா பயத்தில் ஆழ்ந்தார். தற்போது தனக்கென தனியார் பாதுகாவலர்களை நியமித்திருக்கிறார் திஷா.

எங்கு சென்றாலும் அவரை சுற்றி பாதுகாவலர்கள் நின்றுகொண்டு ரசிகர்கள் யாரையும் அருகில் அண்டவிடாமல் கவனித்துக்கொள்கின்றனர்.

.

மூலக்கதை