வரலட்சுமி பட வாய்ப்பு இனியா கைப்பற்றினார்: சமுத்திரக்கனி படத்தில் திடீர் மாற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வரலட்சுமி பட வாய்ப்பு இனியா கைப்பற்றினார்: சமுத்திரக்கனி படத்தில் திடீர் மாற்றம்

சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம் அப்பா. இதை மலையாளத்தில் ஆகாச மிட்டாய் பெயரில் இயக்கவுள்ளார்.

தமிழில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் ஜெயராம் ஏற்கிறார். ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இதற்கான பூஜையில் அனைவரும் பங்கேற்றனர். இந்நிலையில் திடீரென்று படத்திலிருந்து வரலட்சுமி நீக்கப்பட்டிருக்கிறார்.

தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்திலிருந்து வரலட்சுமி விலகி இருக்கிறார். ஆணாதிக்கம், ஈகோ மனப்பான்மையுடன் தயாரிப்பாளர் இருப்பதாக வரலட்சுமி தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் இனியா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஏப்ரல் 1ம் தேதி முதல் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.

இதுபற்றி இனியா கூறும்போது,’ஜெயராம் மனைவியாக நான் நடிக்கிறேன். இது முழுமையான ஒரு குடும்ப படம்.

தமிழிலிருந்து மலையாளத்துக்காக கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸில் எனக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய கிடைத்திருக்கிறது.

ஜெயராமை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

ஆனால் அவருடன் ஜோடியாக நடிப்பது இதுதான் முதல்முறை’ என்றார்.

.

மூலக்கதை