தத்து குழந்தைக்கு சுஷ்மிதா நடனபயிற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தத்து குழந்தைக்கு சுஷ்மிதா நடனபயிற்சி

ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்திருப்பவர் சுஷ்மிதா சென். இவர் 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர்.

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை குறைத்துக்கொண்டு நட்சத்திர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதற்கிடையில் அலிஷா மற்றும் ரெனீ என்ற 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும் வருவதுடன் தனக்கு தெரிந்த கலைகளை வளர்ப்பு மகளுக்கு சொல்லித் தருகிறார். அலிஷா சென்னுக்கு தினமும் நடன பயிற்சி அளிக்கிறார்.

இதற்காக வீட்டிலேயே பிரத்யேக கண்ணாடி அறை நிர்மாணித் திருக்கிறார். சமீபத்தில் மகளுக்கு நடன பயிற்சி அளிப்பதை வீடியோ படமாக எடுத்து அதனை வெளியிட்டிருக்கிறார்.

குழந்தையின் அழகான நடன அசைவுகள் தங்களை கவர்வதாக பலர் கமென்ட் வெளியிட்டுள்ளனர். மீண்டும் முழுவேகத்தில் நடிக்க வருவதுபற்றி சுஷ்மிதா ஆலோசித்து வருகிறார்.

அதற்கு பொருத்தமான கதாபாத்திரம் தேடிக்கொண்டிருக்கிறார்.

.

மூலக்கதை