சென்னையில் நாளை 2500 வகை இட்லி கண்காட்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் நாளை 2500 வகை இட்லி கண்காட்சி

சென்னை- தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் மு. இனியவன் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக இட்லி தினத்தை முன்னிட்டு, சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வகை உணவு பொருட்களாலான இட்லி கண்காட்சி நடைபெறுகிறது.
தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் எம். ஜி. ராஜாமணி, மாநில பொதுச்செயலாளர் அங்கமுத்து, பொருளாளர் டாக்டர் மு. இனியவன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில், மறைந்த முதல்வர் எம். ஜி. ஆர். , முரசொலி மாறன், நடிகர் திலகம் சிவாஜி, நகைச்சுவை அரசி மனோரமா ஆகியோர் உட்பட பல்வேறு பிரபலங்களின் உருவத்தில் இட்லிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
மல்லிப்பூ, இளநீர், பாதாம், தட்டு, பீட்சா, புதினா, ராகி, பீட்ரூட், சாக்லெட் போன்ற உணவு பொருட்களாலான இட்லிகளும், சோட்டாபீம் மற்றும் மிக்கிமவுஸ் உள்ளிட்ட 2500 வகையிலான இட்லிகள் வைக்கப்பட்டு, அதற்கான செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு, பல்வேறு வகை இட்லிகளின் சுவைகளை உண்டு மகிழ வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

.

மூலக்கதை