ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: நாராயணசாமி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: நாராயணசாமி பேட்டி

மீனம்பாக்கம்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினேன்.

மத்திய அரசு விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மவுனம் சாதிக்க கூடாது.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க போவதாக அறிவிப்பு வந்ததுமே, புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியான எதிர்ப்பை தெரிவித்து விட்டோம்.

ஆனாலும், தற்போது, காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சில தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்ற தகவல் வந்ததும், மீண்டும் டெல்லிக்கு சென்று பேசினேன்.

அதில் காரைக்கால் என்று குறிப்பிடப்பட்டிருப்பது. தமிழகத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த பகுதி என்பது தெரிந்தது.

புதுச்சேரியோ, தமிழகமோ. மக்கள் விருப்பம் இல்லாமல், எதிர்ப்பை மீறி, ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது சரியானதல்ல.   மத்திய அரசு எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக செயல்பட்டு இரட்டை வேடம் போடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை