மயாமி ஓபனில் அதிர்ச்சி: 19 வயது வீரரிடம் வாவ்ரிங்கா தோல்வி; காலிறுதியில் நடால், பெடரர்

தினகரன்  தினகரன்

நியூயார்க்: மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்று போட்டி ஒன்றில், 19 வயதேயாகும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெர்வ்-உலகின் 3ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா மோதினர். இதில், அலெக்சாண்டர் ஸ்வெர்வ், 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்டான் வாவ்ரிங்காவை அதிர்ச்சி தோல்வியடைய செய்து, காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியஸ் அல்லது பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர்கொள்ளவுள்ளார். மற்றொரு போட்டியில் பிரான்சின் நிக்கோலஸ் மகத்தை, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயினின் ரபேல் நடாலும் காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் அவர் அமெரிக்காவின் ஜேக் ஷோக்கை எதிர்கொள்கிறார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரர், 7-6 (7-5), 7-6 (7-4) என்ற கணக்கில், ஸ்பெயினின் ராபர்டோ படிஸ்டா அகட்டை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். 2017ம் ஆண்டில் ேராஜர் பெடரர் விளையாடிய 17வது போட்டியில் 16வது வெற்றியை ருசித்திருக்கிறார். காலிறுதியில் அவர் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதுகிறார். 

மூலக்கதை