ஐடி கம்பெனிகளில் இனி பெண்களுக்கு இரவு ஷிப்ட் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ஐடி கம்பெனிகளில் இனி பெண்களுக்கு இரவு ஷிப்ட் ...

இரவில் பணி நிமித்தம் செல்லும் பெண்களுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு நிகழ்வதால் இனிமேல் ஐ. டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இரவுப்பணி வழங்க வேண்டாம் என கர்நாடக சட்டப்பேரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

குறிப்பாக இந்த நடைமுறையை பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்கள் கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.



 

பெண்கள் இரவில் பணிபுரிவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆராய கர்நாடக அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரைபடி கர்நாடகாவில் உள்ள ஐ. டி. , நிறுவனங்களில் இனி பெண் ஊழியர்களுக்கு இரவுநேர பணி வழங்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு காலை அல்லது மதிய பணியை வழங்கிவிட்டு ஆண்களுக்கு மட்டும் இரவு பணி வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறிய அந்த கமிட்டி, பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரை மிக விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

 

.

மூலக்கதை