ரஜினி பயணம் ரத்தையடுத்து இலங்கை தமிழர்களுக்கு ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ரஜினி பயணம் ரத்தையடுத்து இலங்கை தமிழர்களுக்கு ...

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு 150 வீடுகள் கட்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு லைக்கா நிறுவனம் அறக்கட்டளையின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவிற்கு 2. 0 படத்தின் தயாரிப்பாளரும் லைகா நிறுவனருமான சுபாஷ்கரன், ரஜினிக்கும் அழைப்பு விடுத்தார்.

இதையேற்று இலங்கை செல்ல  ரஜினியும் ஒப்புக்கொண்டார்.

  இந்த தகவலை தொடர்ந்து அரசியல்வாதிகளான திருமாவளவன், வைகோ, வேல்முருகன், டாக்டர் ராமதாஸ் ஆகியோர்கள்  ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு செல்ல கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ரஜினிகாந்த் தனது இலங்கை  பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.   இதுகுறித்து லைகா நிறுவனம் ரஜினியை இலங்கை செல்லவிடாமல் தடுத்த தமிழக அரசியல்வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, லைக்கா வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வெளியிட்டனர். தமிழக அரசியல்வாதிகளின் பொய்க்குற்றச்சாட்டை நம்பி, ரஜினியின் இலங்கைப்பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது.   இந்த நேரத்தில் ஒரு அறிக்கை ரஜினிகாந்த் பேரில் சமூகவலைதளங்களில் உலா வருகிறது.

ஆனால் ரஜினியின் அதிகாரபூர்வ  ட்விட்டரில் எந்த அறிவிப்பும் இல்லை.

.

மூலக்கதை