ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கையாக 75 ரவுடிகள் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முன்னெச்சரிக்கையாக 75 ரவுடிகள் கைது

சென்னை- ஆர். கே. நகர் இடைத்தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆர்கே.

நகர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இரண்டு அணிகள், பாஜ, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் சசிகலா அணியினர் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக ரவுடிகளின் உதவியுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டுக்கு பண பட்டுவாடாவும் செய்து வருகின்றனர். தினகரனுக்கு சின்னமான தொப்பியில் மறைத்துவைத்தும் பணம் விநியோகம் செய்யப்படுகிறது.

அத்துடன் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று  மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இதனால ஆர். கே. நகர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஒபிஎஸ் அணி ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்வந்தவண்ணம் உள்ளது.

தினகரன் அணியினர் ஆளும்கட்சி என்பதால் வாக்குப்பதிவு நாளன்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடலாம் என்று போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஆர். கே. நகர் தொகுதியில் போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான ரவுடிகள் 75க்கு மேற்பட்டவர்களை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபோல் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை சென்று வந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

.

மூலக்கதை