அப்பாவிப் பொதுமக்கள் மீது அநியாயமாக வழக்குத் தொடுக்காதிர்கள் – பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
அப்பாவிப் பொதுமக்கள் மீது அநியாயமாக வழக்குத் தொடுக்காதிர்கள் – பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை

அப்பாவிப் பொதுமக்கள் மீது அநியாயமாக வழக்குத் தொடுத்து அவர்களுக்கு அவப் பெயர் எடுக்க விடக்கூடாது என வழக்குத் தொடுத்த பொலிஸாரை எச்சரிக்கை செய்த சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் சந்தேக நபர்கள் இருவரையும்  வழக்கிலிருந்து விடுவித்துள்ளார்.

சாவகச்சேரி – கல்வயல் பகுதியில் முறையற்ற விதத்தில் தலா 2 கிராம் கசிப்பு வைத்திருந்தாக சாவகச்சேரி பொலிஸாரால்  கடந்த 2015 ஏப்ரில் 21 ஆம் திகதி  சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்கள் தாம் சுற்றவாளிகள் எனத் தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது தாம் கூலிக்கு வேலை செய்பவர்கள் எனவும் அன்றைய தினம் கல்வயலில் இருவரும் காணியொன்றில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பொலிஸார் உள்ளே வந்ததாகவும் வீட்டுக்காரர் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும். வேலை செய்து கொண்டிருந்த தங்களை அழைத்து கசிப்பு வைத்திருந்ததாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்

அத்துடன் நாங்கள் மது அருந்துவது கிடையாது கசிப்பு என்ன நிறம் என்பது கூடத் தெரியாது அந்த வீட்டில் கசிப்பு விற்பனை செய்வது கூட எமக்குத் தெரியாது எங்களில் ஒருவர் மட்டுவில் தெற்கையும் மற்றவர் நீர்வேலியையும் சேர்ந்தவர் எனவும்  அவர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

வழக்கினை முற்படுத்திய பொலிஸாரை விசாரணை செய்தபோது மூவரும் முன்னுக்குப் பின் முரணாக சாட்சியமளித்தால் அவர்களை எச்சரிக்கை செய்த நீதிவான்  இருவரையும் இந்த வழக்குகளிலிருந்து விடுதலை செய்வதாக நேற்று தீர்ப்பு வழங்கினார்

மூலக்கதை