ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸ்க்கு இன்னுமொரு பங்காளி

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸ்க்கு இன்னுமொரு பங்காளி

ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸை, அரசாங்க – தனியார் பங்குடமையாக மாற்றும் நோக்கில், ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட ரெக்ஸாஸ் பசுபிக் குழுமத்துக்கு மேலதிகமாக, இன்னுமொரு பங்காளியைத் தேட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்க முயற்சியாண்மை அபிவிருத்தியமைச்சர் கபீர் ஹாஸிம், நேற்றுத் (28) தெரிவித்தார்.

அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரிய போது கிடைத்த 14 விண்ணப்பங்களிலிருந்து ரெக்ஸாஸ் பசுபிக் குழுமம் தெரிவானது. ஆனால், அரசாங்கம் வேறுபல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்தைகளை நடத்தி வருகின்றது என அமைச்சர் தெரிவித்தார்.

அது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸை, புனரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பல விமானக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. இந்தக் குழுவில் எனது அமைச்சின் செயலாளர், வேறு மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் விமானக் கம்பனிகளின் பிரிதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

“தேசிய விமான கம்பனியைப் புனரமைக்கும் போது, விமானக் கம்பனியொன்றும் சம்பந்தப்படுவது அவசியமானது என்ற அரசாங்கத்தின் சிந்தனைக்கு அமைய இந்த கலந்துரையாடல் தொடங்கப்பட்டுள்ளது.

“ரெக்ஸாஸ் பசுபிக் குழுமம், ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸ் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளது.

“A330-200 விமானங்கள் மூன்றை குத்தகைக்குத் தொடர்ந்தும் ஏற்படுத்தல் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஸ்ரீ லங்கா ஏயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் தொடர்ந்தும் இந்த விமானங்களைக் குத்தகைக்கு எடுக்க வேண்டுமென விரும்புகிறார்கள்” என்றார்.

மூலக்கதை