உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் 5 மாநிலங்களில் மாட்டிறைச்சி கூடங்களுக்கு தடை

தினகரன்  தினகரன்

ராஜஸ்தான்: உத்தரப்பிரதேச மாநிலத்தை தெடர்ந்து பாரதிய ஜனதா கட்சி ஆளும் மேலும் 5 மாநில அரசுகளும், அனுமதி பெறாமல் இயங்கிவரும் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதித்துள்ளன. ராஜஸ்தான், உத்தராகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்கும் முயற்சியில் தீவரமாக இறங்கியுள்ளன. உத்திரபிரதேசத்தை தொடர்ந்து ஜார்கண்ட் அரசு, உரிமம் இன்றி செயல்படும் கூடங்களை 72 மணி நேரத்தில் மூட ஆணையிட்டுள்ளது. இதன்படி ஹரித்வாரில் 3 இறைச்சி கூடங்களுக்கு சீல் வைத்துள்ள மாவட்ட நிர்வாகம், ராய்பூரில் உள்ள 11 கூடங்களை இழுத்து மூட உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசும் முதல் நடவடிக்கையாக ஜெய்பூரில் இயங்கும் 4,000 இறைச்சி கடைகளை மூடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் சட்டவிரோதமாக செயல்படும் இறைச்சி மற்றும் விற்பணை கூடங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசும் இந்தூரில் இருந்த இறைச்சி கூடங்களை மூடும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

மூலக்கதை