கர்ப்பிணி வேடத்தில் அக்சராஹாசன்

தினமலர்  தினமலர்
கர்ப்பிணி வேடத்தில் அக்சராஹாசன்

இந்தியில் வெளியான கஹானி படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்தார் இந்தி நடிகை வித்யாபாலன். அந்த படத்தில் நடித்த பிறகு இதுவரை நான் நடித்த வேடங்களில் இந்த கர்ப்பிணி வேடம் ரொம்ப சவாலாக இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது கமல்ஹாசனின் இளைய மகளான அக்சராஹாசனும் லாலி கி சாதி மெயின் லாடு தீவனா -என்ற படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ளார்.

இந்த வேடம் குறித்து அக்சராஹாசன் விடுத்துள்ள செய்தியில், இந்த படத்தில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது ஷாக்காகி விட்டேன். என் வயதுக்கு மீறிய வேடமாச்சே என்று தயங்கினேன். ஆனால் அந்த வேடம் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கக் கூடியது என்பதால், சவாலாக ஏற்று நடித்தேன். இந்த வேடம் எனக்கு மனதிருப்தியை கொடுத்துள்ளது என்கிறார் அக்சரா.

மூலக்கதை