அடங்காதே படத்தில் சரத்குமார் வில்லனா? -டைரக்டர் சண்முகம் முத்துசாமி பதில்

தினமலர்  தினமலர்
அடங்காதே படத்தில் சரத்குமார் வில்லனா? டைரக்டர் சண்முகம் முத்துசாமி பதில்

ஜி.வி.பிரகாஷ், சுரபி, சரத்குமார், மந்திராபேடி, தம்பிராமைய்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள படம் அடங்காதே. சண்முகம் இயக்கியுள்ள இந்த படத்தின் 85 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. ரம்ஜானில் படம் திரைக்கு வருகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் சண்முகம் முத்துசாமி கூறுகையில், அடங்காதே படத்தை இன்றைய அரசியலை பேஸ் பண்ணி பண்ணியிருக்கிறேன். மணிவண்ணனின் அமைதிப்படை அன்றைய அரசியலை சொன்ன படம். அதேபோல் இந்த அடங்காதே இப்போதைய அரசியலை சொல்லும் படம். அமைதிப்படை யில் அரசியலை கிண்டலாக சொல்லியிருப்பார். இந்த படத்தில் சீரியசாக சொல் கிறேன். கதைப்படி, ஜி.வி.பிரகாஷ் ஒரு பைக் மெக்கானிக். சரத்குமாரின் தம்பியாக நடித்துள்ளார். ஆக்சன் கொஞ்சம் அதிகமாகவே பண்ணியிருக்கிறார். அதுஅவருக்கான அளவில் இருக்கும். விஜய், அஜித் அளவுக்கு இல்லாமல் மாநகரம் படத்தின் ஹீரோ பண்ணியதை ஏத்துக்கிட்டோமில்ல, அதே மாதிரி கதைக்கு தேவையான ஆக்சன் இருக்கும். ஜி.வி.பிரகாஷின் ஆக்சன் பர்பாமென்ஸ் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக சரியான அளவில் இருக்கும்.

இந்த படத்தின் பைட் மாஸ்டரான ராஜசேகர், ஜி.வி.பிரகாஷை சில மாதங்கள் ஜிம்மிற்கெல்லாம் போக வைத்து, சரியான பயிற்சி கொடுத்து தயார்படுத்திய பிறகுதான் சண்டை காட்சிகளை படமாக்கினோம். இவ்வளவு நாள் ஜாலியான நடிகராக வந்த ஜி.வி.பிரகாஷ், இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத் துள்ளார். திரிஷா இல்லேன்னா நயன்தாராவுக்கு பிறகு அவர் பண்ண வேண்டிய படம் இது. அப்போதே அவர் இந்த கதையை பண்ணினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதினால் கால அவகாசம் எடுத்து இந்த படத்தை ஆரம்பித்தோம்.

மேலும், இந்தி நடிகை மந்திராபேடி மெயினான ரோல் பண்ணியிருக்கிறார். தம்பி ராமைய்யா, யோகி பாபு ஆகிய இருவரும் தேவையான அளவு காமெடி செய்கிறார்கள். அதோடு, 5 எப்.எம் ஆர்ஜேக்கள் இந்த படத்தில் முதல் தடவையாக நடித்துள்ளார்கள். சூரியன் எப்எம், ரேடியோ மிர்ச்சி என எல்லா எப்எம்பில் இருந் தும் ஆர்ஜேக்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருப்பதாக யூகங்கள் அடிப்படையில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் அவர் வில்லனாக நடிக்கவில்லை. அரசியல்வாதி வேடத்தில் ஜி.வி.பிரகாஷின் அண்ணனாக நடித்துள்ளார். அவரும் ஒன்ஆப்த ஹீரோ மாதிரிதான். காஞ்சனாவில் பண்ணின மாதிரி நல்ல ரோலில் வருகிறார். கதை பிடித்துதான் நடிக்கிறார். காஞ்சனாவுக்கு பிறகு சிறிய வேடங்க ளில் பண்ணமாட்டேன் என்று இருந்தவர். இந்த கதையை கேட்ட பிறகு நடிக்க சம்மதித்தார். படத்தில் அவரும் முக்கியமானவராக இருப்பார்.

வில்லனாக ஒரு இந்தி நடிகர் நடித்துள்ளார். அது அரசியல் வில்லன் ரோல் என்பதால் இப்போதைக்கு அதில் நடிக்கும் இந்தி நடிகர் பற்றி ஓப்பன் பண்ணாமல் வைத்துள்ளேன். 85 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. க்ளைமாக்ஸ் பைட், ஒரு பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளது. இன்னும் பத்து நாள்தான் படப்பிடிப்பு பேலன்ஸ் உள்ளது. அடங்காதே படத்திற்கு முன்பு ஜிவி நடிக்கும் இரண்டு படங்கள் வெயிட்டிங்கில் உள்ளது. அதனால் இந்த படத்தை ரம்ஜானுக்கு வெளியிட பிளான் பண்ணியுள்ளோம். கதைக்கு அதற்கும் சம்பந்தம் இருப்பதால் அப்போது வந்தால் நன்றாக இருக்கும்.

இந்த அடங்காதே படம் சர்க்கார் இந்தி படம் மாதிரி இருக்கும். தமிழில் கேட்டால் அமைதிப்படை போல் இருக்கும். நிறைய அரசியல் பேசியிருக்கிறோம். அதனால் இந்த படங்களைத்தான் இதற்கு அளவு கோலாக சொல்லலாம். ஆனால் அமைதிப்படை மாதிரி காமெடி இருக்காது. சீரியசான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.

மூலக்கதை