சினிமாவில்தான் நான் அப்படி, நிஜத்தில் அப்படியல்ல! -தமன்னா

தினமலர்  தினமலர்
சினிமாவில்தான் நான் அப்படி, நிஜத்தில் அப்படியல்ல! தமன்னா

கமர்சியல் படங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு தரிசனம் காட்டி நடித்தவர் தமன்னா. அதனால் கவர்ச்சி வேடமே அவரது பிரதானமாகி விட்டது. அதோடு, குடும்ப வேடங்களுக்கு தமன்னாவை புக் பண்ணும் டைரக்டர்கள்கூட அவர் படத்திற்குள் வந்த பிறகு சில கிளாமர் காட்சிகளை எக்ஸ்ட்ராவாக இணைத்து விடுகிறார்களாம். பாடல் காட்சிகளில் இமேஜினேஷன் என்ற பெயரில் அவரை துக்கடா டிரஸ் போட்டு படமாக்கிவிடு கிறார்களாம்.

இப்படி தான் கிளாமர் ஹீரோயினியாக்கப்பட்ட கதையை சொல்லும் தமன்னா, நிஜத்தில் அப்படியில்லையாம். பெரும்பாலும், குடும்ப குத்து விளக்கு போல்தான் உடையணிவாராம். சில சமயங்களில் மாடர்ன் உடையணிந்தாலும் அவரை பார்ப்பவர்கள் மரியாதை கொடுப்பதுபோல்தான் அவரது உடையலங்காரம் இருக்குமாம். அதனால் சினிமாவில் தன்னை துக்கடா டிரஸ் அணிய வைத்து தன்னை வேறு கோணத்தில் காண்பித்து தனது இமேஜையே மாற்றி விட்டதாக பீல் பண்ணிவரும் தமன்னா, எதிர்காலத்தில் பாகுபலி அவந்திகா கேரக்டர் போன்று தனது தனித்திறமையை வெளிப்படுத்த ஆசைப்படுகிறாராம். அதனால், தனது அபிமான டைரக்டர்களிடம் தன்னை மாறுபட்ட வேடங்களில் நடிக்க வைக்குமாறு வலியுறுத்தி வருகிறார் தமன்னா.

மூலக்கதை