பலாத்கார வழக்கு : துல்கர் பட கதாசிரியருக்கு 3 வருடம் ஜெயில்..!

தினமலர்  தினமலர்
பலாத்கார வழக்கு : துல்கர் பட கதாசிரியருக்கு 3 வருடம் ஜெயில்..!

துல்கர் சல்மான் நடித்த ஒரு படத்தின் கதாசிரியருக்கு மூன்று வருட ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது என்கிற அதிர்ச்சியைவிட அவருக்கு எதற்காக அந்த தண்டனை கிடைத்துள்ளது என்பதுதான் பேரதிர்ச்சி தருவதாக இருக்கிறது.. கடந்த சில வருடங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடித்த 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' என்கிற படம் வெளியானது.. சமீர் தாஹிர் என்பவர் இயக்கிய இந்தப்படத்திற்கு ஹாசிர் முகமது என்பவர்தான் கதை எழுதி இருந்தார்.. இந்தப்படம் வெளியான சில நாட்களிலேயே ஒரு பெண்ணை பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றதாக இவர்மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்..

கொச்சியில் தனது பக்கத்து பிளாட்டில் வசித்த பெண் ஒருவரை, போதை மருந்தை உட்கொண்ட ஹாசிர் முகமது பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்ததாம்.. கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் ஹாசிர் முகமதுவுக்கு தற்போது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.. இதில் அதிர்ச்சி என்னவென்றால் நீதிமன்ற விசாரணையின்போது, கடவுள் தனக்கு அளித்த செய்தியின்படிதான், உலகின் மிக மோசமான ஏழு பாவங்களில் ஒன்றான இந்த நடவடிக்கையை செய்ய துணிந்ததாக ஹாசிர் முகமது கூறியுள்ளாராம்.

மூலக்கதை