பாகுபலி-2 ஆடியோ ரிலீஸில் பட்டாஸிற்கு மட்டும் ரூ 50 லட்சம் செலவு

தினமலர்  தினமலர்
பாகுபலி2 ஆடியோ ரிலீஸில் பட்டாஸிற்கு மட்டும் ரூ 50 லட்சம் செலவு

பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி-2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவும் மிக பிரம்மாண்டமாய் அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்றது. பிரபாஸ், ரானா, அனுஷ்கா,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் மரகதமணி உள்ளிட்ட பாகுபலி படக்குழுவினருடன் டோலிவுட் பிரபலங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். படத்திற்கு இணையாக விழாவின் மேடை அமைப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, ஆடை அலங்காரம் என நிகழ்ச்சிக்கு பெரும் தொகையை செலவிட்டனர். ஆடியோ ரிலீஸின் போது ஒவ்வொரு பிரபலும் மேடையில் தோன்றும் போது கலர் கலராக பட்டாசு வெடித்து நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்திற்கு மேலும் மெருகூட்டியது. இந்த கலர்கலர் பட்டாசிற்கு மட்டும் பாகுபலி-2 படக்குழு ரூ 50 லட்சம் செலவிட்டுள்ளதாம். பட்டாசிற்கு மட்டுமே ரூ 50 லட்சம் என்றால் மொத்த நிகழ்ச்சிக்கும் என்ன செலவாகியிருக்கும் என டோலிவுட்டில் விவாதம் நடைபெற்று வருகின்றது.

மூலக்கதை