ஊழல்! - விசாரணைகளுக்கு அழைப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஊழல்!  விசாரணைகளுக்கு அழைப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர்!

நிதி மோசடி மற்றும் சட்டவிரோதமாக தன்னுடைய மகள்களை பணியில் அமர்த்தியது தொடர்பான விசாரணைகளுக்கு முன்னாள்  உள்துறை அமைச்சர் Bruno Le Roux, நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
 
ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா பியோன் ஊழல் வழக்குகளில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், உள்துறை அமைச்சராக இருந்த Bruno Le Roux  மீதும் ஊழல் பண மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 21 ஆம் திகதி Bruno Le Roux, உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து நேற்று மார்ச் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரிசின் இலஞ்ச ஒழிப்பு நிதி மோசடி குற்றவியல் தடுப்பு பிரிவினர் (OCLCIFF) முன்னாள் உள்துறை அமைச்சரை விசாரணைகளுக்கு உட்படுத்தினர். 
 
Bruno Le Roux இன் இரு மகள்களையும், தேசிய சட்டமன்ற உதவியாளர்களாக சட்டவிரோதமாக பணியில் அமர்த்தினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்போது இரு மகள்களும் உயர்கல்வி படித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், 'நான் எனது மகள்கள் இருவரையும் எனக்கு உதவியாக பணியில் அமர்த்தியது உண்மை தான். அப்போது அவர்கள் விடுமுறையில் இருந்தார்கள்!' என Bruno Le Roux தெரிவித்திருந்தார். 
 
அதை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு பின்னதாக OCLCIFF அதிகாரிகள் தங்களது விசாரணைகளை ஆரம்பித்தனர்.

மூலக்கதை