சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த உறுப்பு நாடுகளை கோரும் ஐ.நா

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்த உறுப்பு நாடுகளை கோரும் ஐ.நா

 சிறிலங்காவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்காக ஐந்து கோடி 30 இலட்சம் (362000 டொலர்) ரூபா நிதியுதவி கோரப்பட்டுள்ளது. 

 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, அதன் உறுப்பு நாடுகளிடம் இந்த நிதியுதவியை கோரியுள்ளது.
 
விசாரணைக்கான மொத்த செலவின் ஒரு பகுதியையை சிறிலங்காவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான யோசனையை செயற்படுத்துவதற்காக இந்த நிதி தேவை என, அதன ஆணையாளர் சயிட் ராட் ஹுசைன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், மாசிடோனியா, மாண்டிநீக்ரோ மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகள் இந்த யோசனைக்கு அனுசரனை வழங்கியுள்ளன.
 

மூலக்கதை