கோதுமை, துவரைக்கு 10% இறக்குமதி வரி

தினகரன்  தினகரன்

உணவு தானியங்களின் விலை அதிகரித்ததால் கோதுமை, துவரம் பருப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு  கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்தது. இந்நிலையில் உள்நாட்டில் தற்போது கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்தும்  அதிகளவு இறக்குமதி செய்யப்படுவதால், இங்குள்ள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட வெளிச்சந்தையில் குறைவாக  விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் கோதுமைக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தன. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு கோதுமை மற்றும் துவரம்பருப்புக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. மக்களவையில் நேற்று  இதை அறிவித்த நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால், ‘‘நல்ல மழை காரணமாக இந்தாண்டு கோதுமை உற்பத்தி 96.64  மில்லியன் டன்னாகவும், துவரை உற்பத்தி 4.23 மில்லியன் டன்னாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமை மற்றும் துவரம்  பருப்புக்கு உடனடியாக 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும்’’  என்றார்.

மூலக்கதை