வரிசைகட்டும் இ – வாகனங்கள்; ஓகே பிளே இந்தியா அறிமுகம்

தினமலர்  தினமலர்
வரிசைகட்டும் இ – வாகனங்கள்; ஓகே பிளே இந்தியா அறிமுகம்

புதுடில்லி : இந்­தி­யா­வில், பிளாஸ்­டிக் வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்ள, ஓகே பிளே இந்­தியா நிறு­வ­னம், ‘இ – ராஜா’ பிராண்­டின் கீழ், பேட்­ட­ரி­யில் இயங்­கும், எட்டு இ – வாக­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் ராஜன் ஹந்தா கூறி­ய­தா­வது: வரும், 2030க்குள், அனைத்து துறை­க­ளி­லும், 100 சத­வீ­தம் மின்­னணு பயன்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில், தொலை நோக்கு திட்­டத்­து­டன், மத்­திய அரசு செயல்­ப­டு­கிறது. இதன் ஒரு பகு­தி­யாக, பய­ணி­கள் மற்­றும் வர்த்­தக வாகன பிரி­வில், ‘இ – ரிக் ஷா, இ – மொபைல் கடை­கள், இ – பள்ளி பேருந்­து­கள்’ உட்­பட, எட்டு இ – வாக­னங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளோம். இவற்­றின் விலை, 1.25 லட்­சம் – 1.5 லட்­சம் ரூபாய். இவை, டீலர் நெட்­வொர்க் மற்­றும் துணை டீலர்­கள் மூல­மாக, விற்­பனை செய்­யப்­படும்.
மேலும், மத்­திய அர­சின் ஒப்­பு­தல் கிடைத்த பின், ஆறு இ – இரு­சக்­கர வாக­னங்­களை வெளி­யிட முடிவு செய்­துள்­ளோம். நாடு முழு­வ­தும் உள்ள, ஆறு உற்­பத்தி தொழிற்­சா­லை­களில், இ – வாக­னங்­கள் தயா­ரிக்­கப்­படும். மேலும், நான்கு தொழிற்­சா­லை­களை அமைக்க முடிவு செய்­துள்­ளோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை