விரைவில் பங்கு வெளியீடு; சந்தைக்கு வரும் இரு நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
விரைவில் பங்கு வெளியீடு; சந்தைக்கு வரும் இரு நிறுவனங்கள்

புதுடில்லி : அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
ராஜஸ்­தா­னைச் சேர்ந்த, அயு பைனான்­சி­யர்ஸ், வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. பி.எஸ்.பி., புரா­ஜக்ட், கட்­டு­மான துறை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த இரு நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்­தி­ருந்­தன. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­ததை அடுத்து, இந்­நி­று­வ­னங்­கள், விரை­வில் பங்­கு­களை சந்­தை­யில் வெளி­யிட உள்ளன. இதன் மூலம் இவை, 800 – 1,000 கோடி ரூபாய்க்கு நிதி திரட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இது குறித்து, அயு பைனான்­சி­யர்ஸ் நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டும் நிதி, நிறு­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் பணி­க­ளுக்கு செல­வி­டப்­படும்’ என்­றார். பி.எஸ்.பி., நிறு­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்டு பணி­களை, கார்வி இன்­வெஸ்ட்­டார் சர்­வீ­சஸ், மோதி­லால் ஆஸ்­வால் ஆகி­யவை மேற்­கொள்ள உள்ளன.

மூலக்கதை