ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு

தினமலர்  தினமலர்
ஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு

புதுடில்லி : பொது காப்­பீட்டு துறை­யில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.
மத்­திய அரசு, வரும் நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், தான் கொண்­டுள்ள பங்­கு­களில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, நான்கு காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மூலம் மட்­டும், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.அதன்­படி, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், ஓரி­யன்­டல், யுனை­டெட், நேஷ­னல் இன்­சூ­ரன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டுக்கு, மத்­திய அமைச்­ச­ரவை, கடந்த ஜன­வ­ரி­யில் ஒப்­பு­தல் அளித்­தது.
இந்­நி­லை­யில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள, எட்டு நிறு­வ­னங்­களை நிய­மித்­துள்­ளது.

மூலக்கதை