வங்கிகளின் வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை: ‘இக்ரா’

தினமலர்  தினமலர்
வங்கிகளின் வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை: ‘இக்ரா’

மும்பை : தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ரிசர்வ் வங்கி, கடந்த பிப்­ர­வ­ரி­யில் வெளி­யிட்ட நிதி கொள்­கை­யில், வங்­கி­களின் வட்டி விகி­தத்தை உயர்த்­த­வில்லை. வட்டி விகி­தம், தற்­போது மிக­வும் குறை­வாக உள்­ளது. இந்­தாண்டு, இதே நிலை நீடிக்­கும் என, தெரி­கிறது. கடந்த ஜன­வ­ரி­யில், நாட்­டின் சில்­லரை விலை பண­வீக்­கம், 3.17 சத­வீ­த­மாக இருந்­தது; இது, பிப்­ர­வ­ரி­யில், 3.65 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.
நடப்பு மார்ச்­சில், சில்­லரை விலை பண­வீக்­கம், 4.5 சத­வீ­த­மாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.எனி­னும், இது, ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்த, 5 சத­வீத இலக்கை விட குறைவு. அதே சம­யம், நடுத்­தர கால அள­வில், சில்­லரை பண­வீக்­கத்தை, 4 சத­வீ­தத்­திற்­குள் கட்­டுக்­குள் வைக்க, ரிசர்வ் வங்கி இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.அத­னால், ரிசர்வ் வங்கி, ஏப்., 6ல் வெளி­யிட உள்ள, நிதி கொள்­கை­யில், வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை உயர்த்த வாய்ப்பு இல்லை. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை