சரக்கு போக்குவரத்துக்கு தனி பிரிவு ; வர்த்தக அமைச்சகம் திட்டம்

தினமலர்  தினமலர்
சரக்கு போக்குவரத்துக்கு தனி பிரிவு ; வர்த்தக அமைச்சகம் திட்டம்

புதுடில்லி : சரக்கு போக்­கு­வ­ரத்து துறைக்கு என, தனி பிரிவு ஒன்றை ஏற்­ப­டுத்த, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் திட்­ட­மிட்டு உள்­ளது.
சாலை, ரயில், விமா­னம், கடல் உள்­ளிட்­டவை வாயி­லாக மேற்­கொள்­ளப்­படும் சரக்கு போக்­கு­வ­ரத்­திற்கு என, தனி துறையோ அல்­லது அமைச்­ச­கமோ, தற்­போது இல்லை.அத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து சார்ந்த பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, தனி பிரிவை ஏற்­ப­டுத்த வேண்­டும் என, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கோரி வரு­கின்­ற­னர்.சரக்கு ஏற்­று­ம­திக்­கான போக்­கு­வ­ரத்து செல­வி­னம் அதி­க­மாக உள்­ள­தால், இந்­திய பொருட்­கள், சர்­வ­தேச போட்­டியை சமா­ளிக்க திண­று­கின்றன.
சரக்கு ரயில் கட்­டண உயர்வு, போக்­கு­வ­ரத்­தில் தாம­தம், இணைப்பு சாலை­கள் இல்­லா­தது போன்­ற­வற்­றால், அதிக அள­வி­லான சரக்கு பெட்­ட­கங்­கள், சாலை வழியே கொண்டு செல்­லப்­ப­டு­கின்றன. அத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்­தில், ஏற்­று­மதி, இறக்­கு­மதி, உள்­நாட்டு பயன்­பாடு ஆகி­ய­வற்­றுக்கு தனித்­த­னி­யாக சரக்கு போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­களை நிர்­ண­யிக்க வேண்­டும் என, வர்த்­தக அமைச்­ச­கம், ரயில்வே அமைச்­ச­கத்­திற்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது. இத்­திட்­டம் அம­லா­னால், சர்­வ­தேச சந்­தை­யில், இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் போட்­டியை சமா­ளிக்க முடி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
சர்­வ­தேச சந்­தை­யில், இந்­தி­யா­வின் பங்கு, தற்­போது, 2 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, 2020ல், 3.5 சத­வீ­த­மாக உயர்த்த, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், பொரு­ளா­தார வளர்ச்­சி­யும், வேலை­வாய்ப்­பும் பெரு­கும் என்­ப­தால், சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு என, தனி பிரிவை ஏற்­ப­டுத்தி, பல்­வேறு பிரச்­னை­க­ளுக்கு விரைந்து தீர்வு காண, வர்த்­தக அமைச்­ச­கம் திட்­ட­மிட்டு உள்­ளது.

மூலக்கதை