ஈரானை மிரட்டி புதிய வீடியோ: ஐ.எஸ்., வெளியீடு

தினமலர்  தினமலர்
ஈரானை மிரட்டி புதிய வீடியோ: ஐ.எஸ்., வெளியீடு

டெஹ்ரான்: ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு தற்போது ஈரானை மிரட்டி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வீடியோ 30 நிமிடம் ஓடக்கூடியது. இந்த வீடியோவுக்கு 'த பார்சி லேண்ட்: நேற்று முதல் இன்று வரை' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்., வெளியிட்ட வீடியோ குறித்து ஏ.எப்.பி., வெளியிட்ட செய்தியில், "முகமூடி அணிந்த அந்த நபர், ஈரானின் தலைவர் அயடோலா அலி காமினெவின் பெயரை குறிப்பிட்டு பேசத் தொடங்கினார். இஸ்லாமியப் புரட்சியைக் கட்டுப்படுத்தும் நீங்கள் சபிக்கப்பட்ட நபர். நாங்கள் உறுதியளிக்கிறோம் விரைவில் உங்களது இல்லம் அழிக்கப்படும். ஈரான் மீண்டும் சன்னி முஸ்லிம்களின் தேசமாக விரைவில் மீட்டெடுக்கப்படும்.மேலும் வீடியோவில் ஐ.எஸ்., இயக்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் பலர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை