பண மோசடி வழக்கில் லலித்மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப இன்டர்போல் மறுப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித்மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது. கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை சர்வதேச அளவில் ஒலிபரப்புவதற்கான உரிமையை வழங்கியதில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக ஐபிஎல் தலைவர் லலித்மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சென்னை போலீசில் கடந்த 2012ல் கூறப்பட்ட புகார்  அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் லலித்மோடி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்தது.இந்த நிலையில் இங்கிலாந்தில் பதுங்கியுள்ள லலித் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த 2015ம் ஆண்டில் முதல் முறையாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுக்கு கோரிக்கை விடுத்தது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரவான ஆவணங்களும்  இன்டர்போலுக்கு சிபிஐ மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் போதுமான ஆதாரம் இல்லை என கூறி ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப தாமதித்து வந்தது. இந்நிலையில் லலித்மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என இன்டர்போல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லலித் மோடி தனது டிவிட்டர் பதிவில், `‘எனக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப கோரிய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்து விட்டது’’ என பதிவிட்டுள்ளார். ேமலும் ஐபிஎல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேட்டையைும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை