ஈஃபிளைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர்! - ஒருமனதாக ஏற்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஈஃபிளைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர்!  ஒருமனதாக ஏற்பு!!

ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர் அமைப்பதற்கான திட்டம், இன்று முழுமனதாக பரிஸ் மாநகர சபையில் ஏற்கப்பட்டுள்ளது. 
 
பயங்கரவாதிகள் பரிசின் சுற்றுலாத்தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்ற தகவலை அடுத்து, ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடி மதில் ஒன்றை அமைப்பது தொடர்பாக திட்டம் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவால் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பரிஸ் நகரசபையில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்ணாடி மதில் அமைப்பதோடு மட்டுமல்லாது ஈஃபிள் கோபுரத்துக்கு மிகத் தரமான வரவேற்பறையும் உருவாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சக துணை முதல்வர் Jean-François Martins தெரிவித்துள்ளார். 
 
20 மில்லியன் யூரோக்கள் செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கண்ணாடி மதிலின் வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை