ஷங்கரின் 2.0 படத்தில் குள்ள ரஜினி: புதிய

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ஷங்கரின் 2.0 படத்தில் குள்ள ரஜினி: புதிய

2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் 2. 0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார்,  எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாகவும், இந்தியாவில்  அதிக பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் என்ற பெருமையோடு 2. 0 படம் உருவாகி உள்ளது.

தற்போது படத்தின் படப்பிடிப்புகள்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

  ரஜினி 2. 0 படத்தில் விஞ்ஞானி மற்றும் ரோபோவாகவும், அக்‌ஷய் குமார் வில்லன் ரோலிலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல்  வெளியான நிலையில் இப்போது படம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி விஞ்ஞானி மற்றும் ரோபோவாக  மட்டுமல்ல 5 வித்தியாசமான தோற்றத்தில் வர உள்ளாராம்.

அதில் இரண்டு ரோலில் குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார்  என்று கூறப்படுகிறது. ரஜியை போன்றே அக்‌ஷய் குமார் வித்தியாசமான பல வேடங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட  வேடங்களில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது.   இந்திய சினிமாவில் தற்போது இரண்டு படங்களுக்கு தான் கடும் போட்டி நிலவுகிறது.

ஒன்று அடுத்த மாதம் வெளியாக உள்ள  பாகுபலி 2. இன்னொன்று 2. 0 படம்.

இதில் எந்த படம் எதை முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

.

மூலக்கதை