பிரான்சை எச்சரிக்கும் சீனா!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சை எச்சரிக்கும் சீனா!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, குடும்பத் தகராற்றைத் தீர்ப்பதற்காகச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவின் காவற்துறையினரை, வாள் போன்ற கத்தியால் தாக்கிய நபர், சக காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்த விடயம். இதில் கொல்லப்பட்டவர் சீனாவைச் சேர்ந்த 56 வயதுடைய Shaoyo Liu என்பவராவார். இது தொடர்பான போராட்டங்கள் இன்று பரிஸ் 19 இல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் செய்தியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
காவற்துறையின் இந்தச் செயலைக் கண்டித்திருக்கும் சீன அரசாங்கம், தங்களது குடிமக்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டியது பிரான்சின் கடமை என எச்சரித்தள்ளது. தங்களது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளிற்குப் பிரெஞ்சு அரசாங்கம் உறுதியளிக்கவேண்டும் எனவும் எச்சரிக்கை வழங்கி உள்ளது.
 
இவரே காவறதுறையினரைத் தாக்கியிருந்தாலும், குற்றம் செய்திருந்தாலும் கூடத் தங்களது குடிமகன் என்பதால் இந்த உடனடி நடவடிக்கையினைச் சீனா மேற்கொண்டுள்ளது.
 

மூலக்கதை