60 மாணவர்களுக்கு பரீட்சைக்கு அனுமதி மறுப்பு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
60 மாணவர்களுக்கு பரீட்சைக்கு அனுமதி மறுப்பு

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துக்கு, கட்டணம் செலுத்தாதக் காரணத்தினால்,  60 மாணவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற அனுமதி மறுக்கப்பட்டச் சம்பவம், கண்டி, கிங்ஸ்வுட் பாடசாலையில், இன்று இடம்பெற்றுள்ளது.

முதலாம் தவணை பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர்களுக்கே, இவ்வாறு பரீட்சைக்குத் தோற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துக்கு, தலா 6,250 ரூபாயை மாணவர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை செலுத்துமாறு பாடசாலையில் அதிபர் முன்கூட்டியே மாணவர்களுக்கு அறிவித்துள்ளார்.

எனினும் கட்டணத்தை செலுத்தாது பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கே, பரீட்சைக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால், தமது பிள்ளைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இன்று 3 மணியளவில் தொலைநகல் மூலம், தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக, கண்டி வலயக்கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.விஜயர்தன தெரிவித்தார். முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலக்கதை