தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 489 ரன்னுக்கு நியூசி., ஆல் அவுட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 489 ரன்னுக்கு நியூசி., ஆல் அவுட்

ஹாமில்டன்: நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் ஹாமில்டனில் நடந்து வருகிறது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக டிகாக் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்பின் முதல் இன்னிங்சை விளையாட தொடங்கிய நியூசிலாந்து 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 148, சாண்ட்னர் 13 ரன்களுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 176 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் சாண்ட்னரும் 41 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.



டெயில்எண்டர்களான வாட்லிங் 24, மேட் ஹென்ரி 12, ஜீதன் பட்டேல் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய கிராண்ட்ஹோமி 57 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெயில் வாக்னர் மட்டும் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

தென் ஆப்ரிக்கா தரப்பில் மோர்னே மோர்கல், ரபாடா தலா 4, ேகசவ் மகாராஜ் 2 விக்கெட் கைப்பற்றினர். இதன்பின் 175 ரன் பின்தங்கிய நிலையில் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை விளையாட தொடங்கியது.

நாளை ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், வலுவான முன்னிலை பெற்றதால், இந்த டெஸ்டில் நியூசிலாந்தின் கை ஓங்கியுள்ளது.

.

மூலக்கதை