தல்கஸ்வெவவில் வாள்வெட்டு இருவர் காயம்: இருவர் கைது

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
தல்கஸ்வெவவில் வாள்வெட்டு இருவர் காயம்: இருவர் கைது

-எப்.முபாரக்  

திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஸ்வெவ பகுதியில் காணித் தகராறு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவரைக் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் கூறினர்.

தல்கஸ்வெவ பகுதியிலுள்ள தங்களின் வயல்; காணிகளை துப்புரவு செய்வதற்கு தந்தையும் மகனும்  நேற்றுக் (28)  வயலுக்குச் சென்றுள்ளனர்.  இதன்போது, அங்கு வந்த அவர்களின் உறவினர்கள் இருவர், அது தமது காணி என்று கூறியுள்ளனர். இந்நிலையில், இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.  

தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சாந்த சிறிசேன (வயது 54), எஸ்.எஸ்.சுப்புன் (வயது 28) ஆகியோரே வாள்வெட்டுக்கு உள்ளானார்கள்.

 

மூலக்கதை