ஒட்டுமொத்தமாகச் செயயலிழந்த மாநிலம் - அதிர்ச்சியில் அரசாங்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஒட்டுமொத்தமாகச் செயயலிழந்த மாநிலம்  அதிர்ச்சியில் அரசாங்கம்!!

தென் அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் குய்யான் (Guyane) மாநிலத்தில், நேற்று ஆரம்பித்த முழுமையான வேலை நிறுத்தம், இன்று அடுத்த கட்டத்திற்குச் சென்று குய்யான் முழுவதும் செயலிழந்துள்ளது. நேற்றிலிருந்து, பிரெஞ்சு அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியாக இந்தக் கடல் கடந்த மாநிலம் உருவாகி உள்ளது.
 
 
அமைச்சகத்தின் தூதுவர்கள் சென்று பேச்சவார்த்தைகள் நடாத்தியும் எந்தவிதமான பயனும் இன்றி, முமுமையான பணிமுடக்கம் காலவரையறையின்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள், "குய்யானின் முன்னேற்றத்திற்காக" என்ற கோசத்துடன், பெரும் வீதி மறிப்புக்களை ஏற்படுத்தி வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளார்கள்.
 
எயார் பிரான்ஸ் தனது குய்யான் நோக்கிய பறப்புக்களை இன்றும் முற்றாக நிறுத்தி உள்ளது.
 
கடல்நடந்த மாநிலங்களிற்கான அமைச்சர்களுடன், பல்வேறு அமைச்சர்கள் கொண்ட குழுவானது, இந்த வார இறுதிக்குள் குய்யான் செல்வார்கள் என பிரதமர் பேர்னார் காசநெவ் உறுதியளித்துள்ளார். 
 
தேர்தல் நேரத்தில் இந்தப் போராட்டமானது, ஆளுங்கட்சியான சோசலிசக் கட்சிக்குப் பெரும் சவாலாக உள்ளது.
 

மூலக்கதை