களுத்துறை துப்பாக்கி சூடு விவகாரம்: ஏப்ரலுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்?

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
களுத்துறை துப்பாக்கி சூடு விவகாரம்: ஏப்ரலுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்?

களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான அறிக்கையை, அடுத்த மாதத்துக்குள் ( ஏப்ரல்) சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, சம்பவம் தொடர்பிலான அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பிரபல பாதாள உலக குழுவின் தலைவர் சமயங் உள்ளிட்ட 07 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் ரூமி மர்சூக் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவினால் இதுவரை சுமார் 20 நபர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்கமைய, பெறப்பட்டுள்ள வாக்குமூலங்களையும்  ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் அடிப்படையாகக் கொண்டு  அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கை, அடுத்த மாதத்துக்குள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடம் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை