நடித்துக்கொண்டே பிஸ்னஸில் ஈடுபடும் பிரணிதா

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடித்துக்கொண்டே பிஸ்னஸில் ஈடுபடும் பிரணிதா

சகுனி, எனக்கு வாய்த்த அடிமைகள் என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் பிரணிதா. தெலுங்கு, கன்னட படங்களிலும் குறைந்த அளவு படங்கள் மட்டுமே நடிக்கிறார்.

டாக்டர் தம்பதியின் ஒரே மகளான பிரணிதாவுக்கு தொழில் அதிபர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துவந்தது.
அதை நிறைவேற்றுவதற்கு இது சரியான நேரம் என முடிவு செய்தார்.

இதன்படி ஓட்டல், பப் கட்ட முடிவு செய்திருக்கிறார். அத்துடன் பார்களுக்கு சில வெளிநாட்டு மதுவகைகளை சப்ளை செய்யும் பிஸ்னஸும் கையிலெடுக்கிறார்.

இதுபற்றி பிரணிதா கூறும்போது,’நடிப்பு துறைக்கு நான் இளவயதிலேயே வந்துவிட்டேன். அதுபோல் வியாபார துறைக்கும் விரைவாகவே வந்திருக்கிறேன்.

வளர்ச்சி என்பது தேவையானது. நடிப்பு, பிஸ்னஸ் இரண்டுமே என்னைப்பொறுத்தவரை மக்களோடு தொடர்புடையதாகவே அமைந்திருக்கிறது.

நான் நடிப்பை தொடர்வேன்.

வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்க முடிவு செய்திருக்கிறேன்’ என்றார்.

.

மூலக்கதை