ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வயது வரம்பை தளர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வயது வரம்பை தளர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பெண் வழக்கு

புதுடெல்லி- சென்னையைச் சேர்ந்த சவுமியா (23) சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் மகாகவி பாரதியார் மக்கள் கட்சியின் தலைவர் மயிலை சத்யா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 23ம் தேதி ஆர். கே. நகர் தொகுதியில் மகாகவி பாரதியார் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தேன். எனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

எனது வயது 23 என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதால் எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஒருவருக்கு 18 வயது ஆகும்போது வாக்களிக்க உரிமை வழங்கப்படுகிறது.

அந்த உரிமை வழங்கப்படும்போதே அவர் தேர்தலில் போட்டியிடவும் தகுதி பெறுகிறார். எனவே, தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட வயது வரம்பை தளர்த்த வேண்டும்.

ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிடும் வகையில் எனது வேட்புமனுவை ஏற்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான முதல்டிவிஷன் முன்பு விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை