சிறிலங்கா குடிவரவு குடியகல்வு சட்டத்தில் மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்கா குடிவரவு குடியகல்வு சட்டத்தில் மாற்றம்!

 சர்வதேச சூழலின் அபிவிருத்திகள் மற்றும் தீவின் முன்னுரிமைகளுக்கு இணங்க புதிய குடிவரவு குடியகல்வு சட்டம் வரைவுகளை சிறிலங்கா தயாரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
இந்த சட்டமூலம் இலங்கையர்கள் நாட்டைவிட்டு பயணம் மேற்கொள்கின்றமை மற்றும் கடவுச்சீட்டு விநியோக செயற்பாடுகள் என்பனவற்றையும் கையாள்கின்றது. 
 
சர்வதேச நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் பெரும்பான்மையான போக்குவரத்துகள் கடல் மார்க்கமாக இருந்த காலத்திலும் தற்போதைய சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 
 
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில்  குடிவரவு  குடியகல்வு முக்கியமான  வகிபாகத்தை கொண்டிருக்கிறது. தற்காலிகமாக தொழிலாளர்கள் புலம்பெயர்தல், வெளிநாட்டு முதலீடு, எல்லை கடந்த வர்த்தகம், சுற்றுலா, கல்வி வாய்ப்புகள் என்பவை பொருளாதாரத்திற்கு பெறுமதியான பங்களிப்பை வழங்குகின்றன. 
 
தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் மேலெழுகையின் விளைவாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட சந்தைக் கட்டமைப்புகளினாலும் பொருளாதாரத்திற்கு காத்திரமான பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன.  குடிவரவு  குடியகல்வு திணைக்களத்தினால் அண்மையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. 
 
தற்போதைய குடிவரவு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மீளாய்வு தேவைப்படுவதாகவும் இவை தொடர்பான சட்டமூலமும் மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
புதிய சட்டமூல நகல் வரைபிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அத்துடன் நகல் வரைபை சட்டமா அதிபரின் அவதானிப்புகளுடன் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை