கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்! தமிழ்மொழியில் யாழ் மாணவன் சாதனை

PARIS TAMIL  PARIS TAMIL
கபொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்! தமிழ்மொழியில் யாழ் மாணவன் சாதனை

 2016 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 
இம்முறை பரீட்சையில் 7 லட்சம் மாணவர்கள் அளவில் தோற்றியிருந்தனர்.
 
2016 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன.
 
பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை கொழும்பு ஐந்து, விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி சமக்கா பெஸ்குவல் பெற்றுள்ளார்.
 
இரண்டாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி, எஸ்.எம்.முனசிங்க பெற்றுள்ளார்.
 
மூன்றாம் இடத்தை கொழும்பு 10 ஆனந்த மகா வித்தியாலயத்தின் மாணவர் ஆர்.எம்.சுகத் ரவிந்து சன்டர் என்ற மாணவரும், மாத்தறை ராகுல வித்தியாலத்தின் திமுத் ஓசடி மிரிஸ்கமகே என்ற மாணவரும் பெற்றுள்ளனர்.
 
நான்காவது இடத்தை கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லுரியின் மாணவி பபசரா மலிதி குமாரி பெற்றுள்ளார்.
 
அதேநேரம், அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாண இந்து கல்லூரியின் மாணவர் ஏ.அபிநந்தன், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
 
மேலும் 5 ஆவது இடத்தை கொழும்பு தேவி பாலிகா கல்லூரியின் மாணவி ரனுமி திஸாரனி நாணயக்கார  மற்றும் காலி சவுத்லென்ட் கல்லூரியின் மாணவி ரந்தினித சில்வா ஆகியோரும் பெற்று கொண்டுள்ளனர்.

மூலக்கதை