கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்! – எரிபொருள் விநியோகத்தில் இறங்கியது

என் தமிழ்  என் தமிழ்
கொலன்னாவ எண்ணெய் களஞ்சியம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்! – எரிபொருள் விநியோகத்தில் இறங்கியது

கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய கட்டிட தொகுதியை நள்ளிரவில் சுற்றி வளைத்த பெருமளவு இராணுவத்தினர் அதனை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதேவேளை, எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பம் இட்டுள்ளனர். இந்த புதிய சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து எரிபொருள் வழங்கும் நடவடிக்கைக்காக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் கொலன்னாவ எல்லைக்குள் இராணுவத்தினர் நுழைந்தனர். இதன்போது பாதுகாப்பு கதவுகளை மூடிவிட்டு ஊழியர்கள் குழப்பம் ஏற்படுத்தியமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

பெற்றோலிய ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, சாரதிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

பணிப் புறக்கணிப்பு போராட்டதில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பெற்றோல் விநியோகத்தை அத்தியவசிய சேவையாக அறிவித்து நேற்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தற்போது அதனை அத்தியவசிய சேவையாக கருதி இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் பணிக்கு திரும்பாத ஊழியர்கள் தாமாகவே பணியில் இருந்து விலகியதாக கருதப்படுவர். அதன்படி அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை