சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

என் தமிழ்  என் தமிழ்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திருத்தங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, 94 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

மூலக்கதை