ஸ்தம்பிதம் அடைந்த இலங்கை! அதிரடியாக அறிவிக்கப்பட்ட புதிய சட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
ஸ்தம்பிதம் அடைந்த இலங்கை! அதிரடியாக அறிவிக்கப்பட்ட புதிய சட்டம்

 இலங்கையில் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 
புதிய நடைமுறை இன்றுமுதல் அமுலாகும் வகையில் வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது. 
 
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கனியவள ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
 
இதன் காரணமாக இலங்கை முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
 
பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாரதிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
 
இந்நிலையில் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை இன்று காலை முதல் இராணுவம் மேற்கொள்ளும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை