'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு

தினமலர்  தினமலர்
எச்  1பி விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு

வாஷிங்டன்: எச் - 1 பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி உள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழங்கப்படும், 'எச் - 1பி' விசாக்களை, குறிப்பிட்ட சில பிரிவினருக்கு விரைவில் வழங்குவதற்கான நடைமுறைகளை, அமெரிக்கா துவக்கி உள்ளது. அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், வெளிநாடுகளைச் சேர்ந்த தகுதி வாய்ந்த தொழிலாளர்களை, அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால், இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், உயர்கல்வி மையங்கள் உள்ளிட்ட சில பிரிவுகள், வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்த உதவும் வகையில், எச் - 1 பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தளர்த்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த பிரிவுகளுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை, அமெரிக்க அரசு துரிதப்படுத்தி உள்ளது.

மூலக்கதை